ஐசிசியை கேலி செய்த அமிதாப்!

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி இங்கிலாந்து என்பதால் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் சர்ச்சைக்குரியதாக சுட்டிக் காட்டி வரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒருவரிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு உள்ளது. இன்னொருவரிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு உள்ளது.

நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு 5கள் மற்றும் 8 ஜீரோக்கள் உள்ளது.

ஒரு 2000 நோட்டு வைத்திருப்பவரிடம் ஒரே ஒரு இரண்டு மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளது.

எனவே நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரே பணக்காரர் என ஐசிசி முடிவு செய்துள்ளது என்று ஒரு கிண்டலான டுவீட்டை பதிவு செய்து ஐசிசியின் விதியை கேலி செய்துள்ளார்.

Amitabh Bachchan

@SrBachchan

👏👏👏🤣🤣🤣simbil maths .. simply simple https://twitter.com/Equateall/status/1150981311563091968 

NEET – CET – AIIMS – IIT JEE@Equateall
Replying to @SrBachchan @coolfunnytshirt

SibalMaths sir ji.

500 note has 2 zeroes. 4 notes, mean 8 zeroes.
Then there are four 5s.

On one 2000 note, only one 2, and 3 zeroes.

So, 8 zeroes greater than 3 zeroes.
One 2 less than four 5s.

Naturally ICC is right, as they all agreed before!


Recommended For You

About the Author: Editor