கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட புதிய மருந்து – அரசவர்த்தமானி!!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட நோயளிகளிற்கான சிகிச்சைக்கான மருந்துகள் பெரும் விவாதத்திலும், சோதனையிலும் இருந்தன. தற்போது கொரோன வைரஸ் நோயாளிகளிற்கு குளோரோக்கின் (chloroquine) என்படும் மருந்தை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுகாதாரச் சட்டமான Article L. 5121-8 du code de la santé publique இன் மூலம் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய அரசவர்த்தமானியில் ( journal officiel) இது வெளியிடப்பட்டுள்ளது.
Hydroxychloroquine உடன் இணைத்து Lopinavir/Ritonavir ஆகிய மருந்துகளையும் மருத்துவர் வழங்கலாம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை சாதாரண பொது வைத்தியரும் எழுதித்தர முடியும்.
இருப்பினும் இதற்கான தட்டுப்பாடும் வெகு விரைவில் வரலாம் என்றும் அதற்கான மாற்றேற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor