மருத்துவமனைகளுக்கு நிதி சேர்க்க களமிறங்கியுள்ள PSG அணி..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி அளிக்க பரிஸ் உதைபந்தாட்ட அணி (PSG) முன்வந்துள்ளது.

இதற்காக புதிய சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனைகளுக்கு நிதி உதவி வழங்க இந்த புதிய சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.

பரிஸ் உதைபந்தாட்ட அணியின் (la fondation Paris Saint-Germain) வழக்கமான நீல நிற உடையில் Tous Unis எனும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

1,500 சீருடைகள் மாத்திரமே விற்பனைக்கு வந்துள்ள இந்த சீருடை ஒன்றின் விலை €175 யூரோக்கள் ஆகும்.

மொத்தமாக €262.500 கள் இதன் மூலம் சேகரிக்கப்பட்டு அவை அனைத்தும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீருடைகள் அனைத்தும் இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்படும்.

கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றினைவோம் எனும் அர்த்தத்தில் Tous Unis எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக PSG அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: Editor