நோயாளிகளுடனான TGV – மிகவும் குறைந்த வேகத்தில்!!

மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து COVID-19 நோயாளிகள் விமானம், உலங்குவானூர்தி, கப்பல் என பல வழிகளில் இடம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பாதிப்பு அதிகமான இடங்களில் உள்ள வைத்தியசாலைகள், முக்கியமாக ஸ்ரார்ஸ்பேர்க், முலூஸ் போன்ற பகுதிகளில் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதால், இந்த இடம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னும் சிறிது நேரத்தில் 20 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு முதலாவது மருத்துவ TGV புறப்பட உள்ளது.

ஸ்ராஸ்பேர்கிலிருந்து 20 நோயாளிகளுடன் 10h50 இற்குப் புறப்படும் இந்த TGV, 18h05 இற்கு 800 கிலாமீற்றர் தொலைவிலுள்ள Nantes (Loire-Atlantique) இனை வந்தடையும்.

கிட்டத்தட்ட 7 மணியத்தியாலங்கள் இந்தத் தொடருந்து மட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலேயே செல்லும் என SNCF தெரிவித்துள்ளது.

இடையில் Angers (Maine-et-Loire) இலும் சில நோயாளிகளை இறக்கி விட்டுத் மருத்தவத் தொடருந்து தொடர்ந்து பயணிக்கும்.

ஸ்ரார்ஸ்பேர்க் பகுதியிலிருக்கும் அவசர சிகிச்சை நோயளிகள் Angers, Nantes, Mans (Sarthe), La Roche-sur-Yon (Vendée) ஆகிய வைத்தியசாலைகளிற்குப் பிரித்து அனுப்பப்படுவார்கள் எனச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor