பிரான்ஸில் யாழ் இளைஞனை பலியெடுத்த கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் கிறித்தை பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணி ஆவார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பியதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, நீரிழிவு நோயும் இவருக்கு இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க அனுமதித்ததுடன், இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்க மறுத்துவிட்டனர்.

இவரது பிரிவினால் குடும்பத்தினர் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.


Recommended For You

About the Author: Editor