வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மருத்துவர் ஒருவர் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளாக தகுதிவாய்ந்த மருத்துவராகவும், தற்போது கண் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பயிற்சிபெற்று வரும் மரியா ராட்ரோஸ் (Maria Tadros) பேஸ்புக்கில் தனது நிலை குறித்து “மிகவும் உடைந்து போயுள்ளதாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷ்ரோப்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் 28 வயதான மரியா “நான் இன்று வெளியேற்றப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்களன்று வேலையிலிருந்து வீடு திரும்பியவேளை வீட்டு உரிமையாளர் கொரோனோ வைரஸ் குறித்து அச்சமடைந்து, என்னிடம் நோயாளிகளைப் பார்வையிடுகின்றீர்களா என்று கேட்டதாகவும் மரியா பதிவிட்டுள்ளார்.

வேலையிலும், வீட்டிற்கு வரும்போதும் நான் சுகாதாரத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

எனினும் வீட்டு உரிமையாளர் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். ஏனென்றால் இது அவருடைய வீடு என்று மரியா தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor