ஹங்கேரியில் பிரித்தானிய ராஜதந்திரி உயிரிழந்தார்

கொரோனா வைரஸ் நோயினால் பிரித்தானியாவின் சிரேஸ்ர ராஜதந்திரி ஒருவர் ஹங்கேரியில் உயிரிழந்துள்ளார்.

புடாபெஸ்ற்-இல் (Budapest) உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரான ஸ்டீவன் டிக் (Steven Dick) நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

37 வயதான ஸ்டீவன் டிக்கின் உயிரிழப்பினால் தூதரக ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் அவர் தனது தாய்நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பாகச் செயற்பட்டார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

ஸ்டீவன் எமது அன்புக்குரிய மகன், பேரன் மற்றும் மருமகன் என்று அவரது பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் பணியாற்றுவதே அவரது கனவாக இருந்தது. வெளிநாடுகளில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அவரது இழப்பால் நாங்கள் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளோம். இந்தத் துயரமான நேரத்தில் எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor