பார்த்திபனின் வித்தியாசமான பாராட்டு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் எடுத்த முன்னெச்சரிக்கை அதிரடி நடவடிக்கைகளால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது

குறிப்பாக தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

இதுவரை ஒரே ஒரு நபர் மட்டுமே கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் எடுத்து வருவதை எதிர்க்கட்சியினர் கூட கட்சி பேதமின்றி பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், அமைச்சர் விஜயபாஸ்கரின் அயராத அயராத சேவையை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

அப்போது அவர் மலர்க்கொத்து கொடுப்பதற்கு பதிலாக ஐந்து லிட்டர் சானிடைசர் கேன் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.

பொக்கே கொடுப்பதற்கு பதிலாக 5 லிட்டர் சானிடைசர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு”என்று எழுதி கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor