அமலாபாலுக்கு பணம் மட்டுமே முக்கியம்: பெண் அரசியல்வாதி

அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிரியா ராஜேஸ்வரி என்ற அரசியல்வாதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து போலீஸ் புகாரும் கொடுத்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு பின் பாமகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய பிரியா ராஜேஸ்வரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நிர்வாண காட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் புகார் கொடுத்துள்ளேன். போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் உள்ள நிர்வாணக் காட்சிகளை நீக்கும்படி நாங்கள் புகார் கொடுக்க வில்லை. ஏனெனில் இந்த படம் சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் ஒரு காட்சியை நீக்கும்படி சொல்வது சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த நிர்வாண காட்சியை விளம்பரப்படுத்தப் கூடாது என்பது குறித்து புகார் மனு அளித்துள்ளோம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த படத்தின் விநியோகிஸ்தர்ளிடம் நிர்வாண காட்சியை விளம்பரப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளனர். விநியோகிஸ்தர்களும் அதனை ஒப்புக் கொண்டதால் இந்த படத்தின் விளம்பரங்களில் இனிமேல் நிர்வாண காட்சிகள் வராது என்று நம்புகிறோம் .

மேலும் நடிகை அமலா பால் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து தெரியாது. அவருக்கு தேவை ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும், இரண்டாவது பணம். இந்த இரண்டுக்காகத்தான் அவர் இம்மாதிரியான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் இளம் வயதினரை தவறான வழியில் கொண்டு வாய்ப்பாக அமையும்.

தற்போது தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற காட்சிகளை விளம்பரப்படுத்தினால் சிறுவர்களின் மனம் கூட மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த காட்சியை விளம்பரப்படுத்த கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்கள் நினைத்தால் இந்த படத்தை தோல்வி அடையச் செய்யலாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் தயாராக இருக்கிறார்களா? ன்பதுதான் இப்போதைய கேள்வி என்று பிரியா ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor