163 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து விடுவிப்பு!

14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்ததாக அடையாளம் காணப்பட்ட 163 பேர் கொண்ட மற்றொரு தொகுதியினர் இன்று விடுவிக்கப்படுவார்கள் என ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மார்ச் 1 முதல் 15 வரை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 20,000 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் இதில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டவர்கள் உட்பட சிலர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இதுபோன்ற வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவுவாங்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor