தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை ஆதாரமாக வைத்து வழங்கப்பட்ட தனிநபர் கடனுக்கான தவணைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்தித்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி அரச ஊழியர்களினதும் தனியார் துறை நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020 மே மாதம் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor