ஊரடங்கு – சிறுவர் துஷ்பிரயோகங்கள் 33 சத வீதத்தால் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 33 சத வீதத்தினால் அதிகரித்திருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்திருக்கிறார்.

இவற்றுள் பாலியல் ரீதியான துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகவில்லை என்று குறிப்பிட்ட அவர், வன்முறையைப் பிரயோகிக்கும் நபரும் பாதிக்கப்படும் சிறுவர்களும் ஒரே வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழ்நிலை காரணமாகவே இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் நாளாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சுமார் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதுடன் அவற்றில் 10 சத வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்டனவாகும்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரான 7 நாட்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த 1 11 முறைப்பாடுகளில், 36 முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளாகும்.

எனவே ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இக்காலப்பகுதியில் சிறார்களை, பிள்ளைகளை பொறுப்புடன் பாதுகாப்பாகவும் கவனித்துக கொள்ளும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

சிறுவர்கள் வீடுகளுக்குள் முடங்கிப்போய் உள்ள நிலையில் அவர்களது மனநிலை குறித்த புரிதலை பெரியோர் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நாம் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.


Recommended For You

About the Author: Editor