€2,000 தண்டப்பணம்! – 18 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் இரத்து..!!

பாரிசில் பார்வையற்ற நபர் ஒருவரை தாக்கிய நபருக்கு 18 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 16 ஆம் திகதி, கண்பார்வையற்ற நபர் ஒருவர், பாதசாரி கடவை ஒன்றில் வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது வீதியில் சென்றுகொண்டிருந்த மகிழுந்து ஒன்று நிறுத்தவேண்டி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகிழுந்து சாரதி, மகிழுந்தை விட்டு இறங்கி, குறித்த பார்வையற்றவரை தாக்கினார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. பார்வையற்றவர் தாக்கப்படுவது பாதசாரி ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் குறித்த சாரதி பார்வையிற்றவரிடம் மன்னிப்பு கோரியிருந்த போதும், திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு €2,000 வரையான தண்டப்பணமும், 18 மாதகால ஓட்டுனர் உரிமம் இரத்தும் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor