கொரோனா 10 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள்!!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க லண்டனின் எக்ஸெல் மண்டபம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றது.

அங்கு 4000 படுக்கைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நோயாளர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸெல் மண்டபம் அடுத்த வாரம் முதல் நைட்ரிங்கேல் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டு மருத்துவமனையாக இயங்கும் என்று சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் நேற்று முன்தினம் செவ்வாயன்று தெரிவித்தார்.

இவ்வாறு நாடு முழுவதும் உள்ள பல தளங்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படவுள்ளன.

சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கு உதவுவதற்காக ராணுவத் திட்டமிடல் பிரிவினர் ஏற்கனவே ஐந்து இடங்களை ஆய்வு செய்துள்ளதாக வைற்ஹோல் (Whitehall) வட்டாரம் தெரிவித்துள்ளது.

படையினரால் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மன்செஸ்ரர், பேர்மிங்கம் மற்றும் நியூகாஸல் போன்ற முக்கிய நகரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

நன்றி news.sky.com


Recommended For You

About the Author: Editor