அஞ்சல் அலுவலகங்களைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் அஞ்சல் அலுவலகங்களைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள், பிரதேசத்தின் நோயாளர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துகளைப் பெற்றுச் சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு, குருதி அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு அரச வைத்தியசாலைகளில் மாதந்த கிளினிக்குச் செல்லும் நோயாளர்களுக்கு இரண்டு மாதத்துக்கு தேவையான மருந்துகளை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்