இந்தியாவில் இதுவரை 649 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 10ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பையில் கடந்த 24ம் திகதி உயிரிழந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெயந்தி ரவி கூறுகையில், மாநிலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் தொடர்புடைய 4 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். சத்தீஸ்கரில் 6 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு, மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது.

கடந்த 3ம் திகதி குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வந்தார். அவரது ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

முடிவுகள் வராத நிலையில், அவர் உயிரிழந்தார். பரிசோதனை முடிவு வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்