தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸினால், பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்