தமிழக மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்!

பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்று, மூன்று வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்குமாறு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள், அரசு கூறிய விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.

மனித நேயமும், இந்திய தேசமும், கொரோனா வைரஸுக்கு எதிராக தொடுத்துள்ள போரில், தமிழகம் முன்மாதிரியாக திகழ்ந்து, வெற்றியை நோக்கி வழி நடத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்