அமெரிக்காவில் பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் இந்தியர் உள்பட 5 முன்னாள் பாதிரியார்களுக்கு எதிராக செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெட்ராய்ட், லான்சிங், கலமாசோ மறைமாவட்ட பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்களாக 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

அவரது பெயர் ஜேக்கப் வெல்லியன் (84). இவர்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் இவர்கள் மீது ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது.டௌதி

அதைத்தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த 4 பாதிரியார்கள் அரிசேனா, கலிபோர்னியா, பிளோரிடா, மிச்சிகன் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

பாதிரியார் வெல்லியன் தற்போது கேரள மாநில கோட்டயத்தில் உள்ள தெல்லாகோம் என்ற இடத்தில் தங்கியுள்ளார். விசாரணைக்காக இவரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெறுகிறது.

பாதிரியார் வெல்லியன் அமெரிக்காவின் மிச்சிகன் மறைமாவட்டத்தில் கடந்த 1970-ம் ஆண்டுகளில் பணி புரிந்தார். நல்லொழுக்கம் மற்றும் இறைபக்தி மிக்கவர் என தேவாலய வட்டாரத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor