பிரான்சில் 1331 அதிகரித்தது கொரோணா மரணம்

பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் இன்று புதன்கிழமை வெளியிட்ட தகவல் படி கொரோனா வைரசினால் இன்று மட்டும் 231 புதிய மரணங்கள் பதிவு செய்துள்ளனர், இதனுடன் சேர்ந்து பிரான்சில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பிரான்சில் தினசரி 21% அதிகரிப்பைக் குறிக்கிறது, இது முந்தைய இரண்டு நாட்களிலிருந்து சற்று குறைந்துள்ளது.

தினசரி அரசாங்கம் மருத்துவமனையில் இறப்பவர்களுக்கு மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது ஆனால் வீடுகளில் நடைபெறும் மரணஙங்கள் குறித்த தரவுகள் தொகுக்கப்படுவதாகவும் அது  விரைவில் தொகுக்க பட்டு முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் , இந்த பதிவுகள் கிடைக்கும் போது மரணங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்திற்கு  வழிவகுக்கும் என தெரிவித்தார்,

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​சுகாதார நிறுவன இயக்குனர் ஜெரோம் சாலமன் தெரிவித்தார்

மேலும் அவார்  கூறுகையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,233 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 13% ஆக அதிகரித்துள்ளது.

11539 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை வளங்கப்படுவருகிறது இவர்களில் 2,827 பேர் ஆபத்தான நிலையில் உள்ள தாக தெரிவித்தார்


Recommended For You

About the Author: Editor