கொரோனா வதந்தி பரப்பிய பல்கலை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்!!

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, குறித்த நபரை எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த நபர் தனது முகநூல் கணக்கில் COVID-19 தொடர்பான தவறான தகவல்களை பரப்பியுள்ளார் என பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.


Recommended For You

About the Author: Editor