தேவாலய மணிகள் நாடு முழுவதும் ஒலிக்கின்றன…!!

இன்று புதன்கிழமை இரவு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களின் மணிகள் ஒரே நேரத்தில் ஒலிக்க உள்ளன.
பிரான்சின் ஆயர்களின் கூட்டமைப்பு இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மார்ச் 25 ஆம் திகதி புதன்கிழமை இரவு, 19:30 மணிக்கு பிரான்ஸ் முழுவதும் உள்ள தேவாலய மணிகள் ஒரே நேரத்தில் ஒலிக்க உள்ளன.
கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கவும் இந்த மணி ஒலிக்க விட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவேளை, நாடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அவர்களுக்கு அஞ்சலியும், ஆதரவும் தெரிவிக்கும்படியும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கம், கத்தோலிக்கம் அல்லாதவர்கள் என அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor