இல்-து-பிரான்சில் இருந்து வெளியேற்றப்படும் கொரோனா நோயாளிகள்!!

இல்-து-பிரான்சிற்குள் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகமாவதால், இங்கிருந்து பல அவசரசிகிச்சையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.

பிரான்சின் அவசரசிகிச்சைப் பிரிவின் வைத்தியர்களின் தலைவரான Agnès Ricard-Hibon, Beaumont-sur-Oise (Val-d’Oise) வைத்தியசாலையில் அனெஸ்தெசிப் பிரிவின் தலைவராகவும் உள்ளார். இவரே இந்த நோயாளிகள் வெளியேற்றத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
பிரான்சின் முலூஸ், ஸ்ரார்ஸ்பேர்க் பகுதிகளில் போலல்லாது, இங்கு வைத்தியசாலைகள் வசதிகள் பெருமளவில் இருந்தாலும், முன்னெச்சரிக்கை காரணமாக, தொடரும் நோயாளிகளின் அதிகரிப்பைச் சமாளிப்பதற்காக, குறிப்பிட்ட உயிராபத்திலுள்ள சில நோயாளிகளை, ருவோன் (Rouen -Seine-Maritime) வைத்தியசாலைகளிற்கு அனுப்பி வைக்க ஆரம்பித்துள்ளதாகவும் அன்யேஸ்-ரிசார்-இபொன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor