இல்-து-பிரான்ஸில் நாளை 50 மெற்றோ நிலையங்கள் வரை மூடப்படுகின்றன!

நாளை முதல் இல்-து-பிரான்சுக்குள் பெருமளவாக போக்குவரத்தை குறைக்க SNCF மற்றும் RATP தீர்மானித்துள்ளன.

இல்-து-பிரான்சுக்குள் ஐம்பது மெற்றோ நிலையங்கள் வரை மூடப்பட உள்ளன. அனைத்து RER சேவைகளும் இரவு 10 மணியுடன் முடிவுக்கு வருகின்றன.

<<பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கும் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படும்>> என Ile-de-France Mobilités (இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைப்பு) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RER சேவைகளுக்கு மாற்றீடாக இரவு 10 மணிக்கு பின்னர் பேருந்து சேவைகள் இயக்கப்படும்.

நாளை வியாழக்கிழமையில் இருந்து SNCF தனது சேவைகளை 25% ஆக குறைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor