ஓர்லி விமானநிலையம் மூடப்படுகின்றது!

பிரான்சின் சார்ள்-து-கோல் விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய விமானநிலையமான ஓர்லி (ORLY) விமான நிலையம் தற்காலிகமாக எதிர்வரும் 31ம் திகதியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசிலிருந்து மிக அருகிலுள்ள இந்த விமானநிலையமானது, கொரோனாவைரஸ் தாக்கத்தினால், விமானப் போக்குவரத்துக்கள் பெருமளவில் வீழ்ச்சியடைந்தமையால், 31ம் திகதி இரவு 23h59 உடன் தங்களது சேவைகளை நிறுத்தி மூடப்படுவதாக, பரிசின் விமானநிலையங்களின் அமைப்பான Group ADP தெரிவித்துள்ளது
சார்ள்-து-கோல் விமான நிலையமும், Terminal 3, மற்றும் Terminal 2G அகியவற்றின் சேவைகளை நிறுத்தி மூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor