நடுவானில் குலுங்கிய எமிரேட்ஸ் விமானம்!!

நியூசிலாந்தின் ஓக்லாண்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு பயணித்த எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏ380 என்ற இரட்டைத் தள விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியதால் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

டுபாயில் தரையிறங்குவதற்கு மூன்று மணி நேரம் இருக்கும்போது, நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், கடும் காற்றின் காரணமாக திடீரென்று குலுங்கியது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

சில நிமிடங்கள் தொடர்ந்து விமானம் குலுங்கியதால் பயணிகள் சிலர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்கள் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த பொருட்கள் கிழே விழுந்தன. சிறிது நேரத்துக்குப் பின்னர் கொந்தளிப்பு சீரானது.

இதுபற்றி எமிரேட்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பத்தில் சில பயணிகளும் பணிப்பெண்கள் சிலரும் காயமடைந்தனர். விமானம் தரையிறங்கிய பிறகு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

அண்மையில், கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சென்ற எயா கனடா விமானம் இதே போன்ற பாதிப்பை சந்தித்த நிலையில், எமிரேட்ஸ் விமானம் கொந்தளிப்பைச் சந்தித்திருப்பது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor