கொரோனா கர்ப்பிணித் தாயால் வைத்தியாசாலைக்கு சீல்

கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி மகப்பேற்று சிகிச்சைகளுக்கு சென்ற தனியார் வைத்தியசாலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது குறித்த கர்ப்பிணித் தாயின் வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர்கள் சிலர் வந்துள்ளனர்.

அவர்கள் அங்கு தங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந் நிலையில் இது குறித்து அரிந்துள்ள சுகாதர அதிகாரிகள், அந்த கர்ப்பிணித் தாயை 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் வீட்டிலேயே சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த விடயத்தை கணக்கில் கொள்ளாது அந்த கர்ப்பிணிப் பெண் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே அப்பெண் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவற்றை தேடிய பொலிசாரும் சுகாதார பிரிவினரும், அவர் சிகிச்சைக்கு சென்ற தனியார் வைத்தியசாலைக்கும் சீல் வைத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor