கொரோனா – இலங்கையின் முதல் சிவப்பு அபாய வலயத்தை அறிவித்தது அரசாங்கம்!

முஸ்லிம் மக்கள் அதிகமான வாழ்கின்ற களுத்துறை பேருவளை பகுதி கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் சிவப்பு அபாயம் கொண்ட பகுதியான அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பேருவளை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் வருண செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் சுமார் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட 135 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 13 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பட்ட நிலையில், அவர்களில் 07 பேர் பேருவளையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பேருவளை நகரானது ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப் பிரயாணிகள் அதிகமாக வரும் பகுதி என்பதுடன் இந்தியா, சிங்கப்பூர், கொரியா, டுபாய், மடகஸ்கார் போன்ற நாடுகளிலிருந்தும் அதிகமானவர்கள் வந்து வசிக்கின்ற பகுதியாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor