ஊரடங்கு வேளையில் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை!!

இலங்கையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கட்டுநாயக்க – குரன பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்கெட்) ஒன்று விசமிகளால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவில் இடம்பெற்றிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மா, பணம் மற்றும் தானிய வகைகள் இவ்வாறு அடையாளம் காணப்படாத நபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் குறித்த விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் தீவிரமாக நடத்திவருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor