உணவு விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை!!

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் உணவு விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், இலங்கையிலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது. இதனால் நாள் கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்பிரச்சினைக்கு பலரும் முகம்கொடுத்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் சிறிநேசன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor