நடிகர் விவேக் தாயார் மரணம்!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் (வயது 86) காலமானார்.

மாரடைப்பின் காரணமாக இவர் சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும் அழைக்கின்றனர்.

1990ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துணை நடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

விவேக்கின் சொந்த ஊர் மதுரை ஆகும். அங்கையா பாண்டியன் – மணியம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். விவேக்கின் தாயார் சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சங்கரன் கோவில் அருகே உள்ள சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் நாளை இவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor