விசேட அதிரடிப்படையினர் மன்னாரில் சிறப்பு நடவடிக்கை!!

மன்னார் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்தனர்.

விசேட அதிரடிப்படையினருடன் மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த பணியை இன்று முன்னெடுத்தனர்.

விசேட அதிரடிப்படையின் வடமாகாண பொறுப்பதிகாரி லயனல் குணதிலக்கவின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த கிருமி நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த நடவடிக்கை, வவுனியா விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டிப்தி கெட்டி ஆராய்ச்சி, மன்னார் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி மலன் பிகிராடோ மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிஷாந்தன் ஆகியோர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரதான வீதிகள் உட்பட மன்னார் பள்ளிமுனை பிரதான வீதி, மன்னார் வைத்தியசாலை பிரதான வீதி உட்பட பல்வேறு வீதிகளில் விசேட அதிரடிப்படையினரினால் கிருமி நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor