தொலைபேசி எண்களை அறிவித்தது பொலிஸ் தலைமையகம்!

ஊரடங்கு உத்தரவின்போது மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மூன்று தொலைபேசி எண்களை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 119, 0112 444 480 மற்றும் 0112 444 481 என்ற தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவுக் காலத்தின்போது நோயாளர்கள் தொடர்பாக, மின்சார துண்டிப்பு, நீர் விநியோகத் தடை, மருந்துகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் உதவிகளுக்கு குறித்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இலகுவான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றது.


Recommended For You

About the Author: Editor