தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சபை நிதியை பயன்படுத்த அனுமதி கோரல்!!

வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் கோரோனா ரைவஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

இந்த நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப் பொருள்களை வழங்க சபை நிதியைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

வலி. தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்துமூலம் இந்த அனுமதியை கோரியுள்ளார்.

“நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நோய்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வலிகாமம் தென்மேற்கு பிரதேசம் அதாவது மானிப்பாய்ப் பகுதியில் உயர்வடைந்து வருகின்றது.

அதனால் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளை வழங்குவதற்கு எமக்குள்ள சட்ட ஏற்பாட்டிற்கமைய சபை நிதியினை பயன்படுத்துவதற்கு அனுமதி தந்துதவுமாறு மிக தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களின் விரைவானதும், சாதகமானதுமான பதிலினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்” என்று வலி. தென்மேற்கு தவிசாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor