ஆர்.ஆர்.ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

புதுவிதமாக அமைந்துள்ள இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ரிலீசாக உள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்