இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகிய 105 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது நாடு முழுவதும் 790 என்ற அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் சுகாதார அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் மூவர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவந்த 31 பேர் குணமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்