வவுனியாவில் 137பேர் சுய தனிமைப்படுத்தலில்- 538 பேர் மையங்களில்

கொரோனா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 137 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் செட்டிகுளம் பிரிவில் 17 பேரும், வவுனியா வடக்கில் 8 பேர் மற்றும் யாழில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேர் உட்பட 137 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட வெளிநாட்டில் இருந்து வருகைதந்த வெளிநாட்டுப் பயணிகள் 538பேர் வவுனியா மாவட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் 212 பேரும், பெரியகட்டு இராணுவ முகாமில் 120 பேரும், பூவரசங்குளத்தில் 206 பேரும் என 538 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்