கொழும்பில் ஊரடங்கு தொடரும்… வடக்கில் வெள்ளிவரை நீடிக்கப்படும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும்.

மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை (26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்