யாழ்.மாநகரில் கழிவகற்றல் செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருந்த காரணத்தால் இடைநிறுத்தப்பட்ட கழிவகற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார்.

“கடந்த வெள்ளிக்கிழமை மாலை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவகற்றல் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.

அதனால் வீதி எங்கும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணிகள் நாளை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்பட உள்ளன. முக்கியமான வீதிகள் மற்றும் மாநகரப் பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்களால் வைக்கப்படும் கழிவுகள் அகற்றும் செயற்பாடு இடம்பெறும்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படும்” என்று யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்