சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகர் மீது கடும் நடவடிக்கை!!

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் காணப்பட்டு வந்த நிலையில் இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் விட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

அதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் சுவிஸ் மத போதகர் நடத்திய ஆராதனையில் பங்குகொண்டிருந்தவர்களில் 20 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இராணு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor