சர்வதேசத் திரைப்பட விழா அரங்கு விடற்றவர்களிற்காக..

செங்கம்பளம் விரித்து, உலகத்தின் பிரபலங்களை வரவேற்று, வருடாந்தம் பெரும் உலகத்திரைப்பட விழா நிகழும் கான் திரைப்பட விழா மண்டபம், வீடற்வர்களிற்காகத் (sans-abris – SDF) திறந்து விடப்பட்டுள்ளது.
இங்கு இவர்களிற்கான கட்டில்கள், குளியலறைகள், உணவுகள் போன்றவை பாதுகாப்பு இடைவெளிகள் கணிப்பில் எடுக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு ஒருமைப்பாட்டு (solidarité) நடவடிக்கையில் உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தங்கவரும் வீடற்றவர்களின் பொதிகள் சோதனையிடப்பட்டு, அவர்களின் உடல்வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள்.
19ம் திகதி மார்ச் மாதம் இங்கு நிகழ இருந்த சர்வதேசத் திரைப்பட விழா, தற்பொழுது ஜுன் மாத இறுதிக்கு அல்லது ஜுலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor