பிரதமரின் அதிரடி நடவடிக்கைகள் – முக்கிய விபரங்கள்

நேற்று ஊடகச் செவ்வியில் பிரதமர் எதுவார் பிலிப், உள்ளிருப்புச் சடத்தின் புதிய நடைமுறைகளை அறவித்திருந்தார்.
நாட்டில் சுகாதார அசவரகாலநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளைப் பிரதமர் அறிவித்துள்ளார்.
உடற்பயிற்சி மற்றும் பிள்ளைகளை வெளியே கொண்டு செல்வது
உடற்பயிற்சிக்காக ஒடுவதற்கும், பிள்ளைகளைச் சிறிது வெளிக்காற்றைச் சுவாசிக்கக் கொண்டு செல்வதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அனுமதிப்பத்திரத்தில் நேரம் குறிப்பிடப்பட்டே வெளியில் செல்லவேண்டும் என்றும் இது ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டும் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
வீட்டிலிருந்து ஒரு கீலோமீற்றர் தொலைவினைத் தாண்டுவது தடைசெய்யப்பட்டுள்து. மீறினால் குற்றப்பணம் விதிக்கப்படும்.
சந்தைகள் மூடப்படுகின்றன
பிரான்சில் சந்தைகள் அனைத்தையும் மூடும் உத்தரவைப் பிரதமர் எதுவார் பிலிப் வழங்கி உள்ளார். உடனடியாகப் பரிசிலுள்ள திறந்த சந்தைகள் மூடப்படுகின்றன.
விதிவிலக்காக வேறு கடைகள் இல்லாவிட்டால், சில சிறு கிராமங்களில், சந்தைகள் மட்டுமே உணவுப் பொருட்களை வழங்கக் கூடிய நிலை இருந்தால், மாவட்ட ஆணையரும், நகரபிதாவும் இணைந்து முடிவெடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகைளுடன் சந்தைகளைத் திறக்கமுடியும்.
உள்ளிருப்புக் காலம் பல வாரங்களிற்கு நீட்டிப்பு
உள்ளிருப்புக் காலம் (confinement) மேலும் பல வாரங்களிற்கு நீட்டிக்கப்படும் எனவும்  இதன் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
அவசர நிலைமையில் மட்டுமே மருத்துவத்திற்காகச் செல்ல முடியும்
மருத்துவரின் அழைப்புக் கடிதத்துடன் (convocation du médecin) மட்டுமே, அல்லது அவசர நிலைமைகளில் மட்டுமே வைத்தியசாலைக்கோ, மருத்துவரிடமோ செல்ல முடியும்.
அதற்கும் வெளியே செல்லும் அத்தாட்சிப்த்திரமும், மருத்துவ அழைப்புக் காட்டப்படல், அல்லது முறையானகாhரணம் நிரூபிக்கப்படல் வேண்டும்.
முழுமையான ஊரடங்குச் சட்டம் இல்லை.
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் தற்போதைக்குச் சாத்தியம் இல்லை என்றும், ஒவ்வொரு நகரமும் தங்களது மாவட்ட ஆணையர் மற்றும் நகரபிதாக்களின் முடிவுகளுடன் ஊரடங்குச் சட்டத்தினை அறிவிக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor