கொரோனா வைரஸினால் கனடாவில் 24 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 பேரும் ஒன்ராறியோவில் 6 பேரும் கியூபெக்கில் 04 பேரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு இத்துறவை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,091 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிலும் ஒன்ராறியோவில் 503 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 472 அல்பேர்ட்டாவில் 301 பேரும் என நாடு முழுவதும் 2,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்