சுற்றுச்சூழல் மாசு! – வரலாறு காணாத வீச்சி..!!

‘வீட்டில் இருங்கள்’ என்ற அரசின் கட்டுப்பாட்டை அடுத்து, பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணங்களில் வரலாறு காணாத அளவு சுற்றுச்சூழல் மாசு வீழ்ச்சியடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மக்களை அவசியமின்றி வெளியேறவேண்டாம் என அரசு தரப்பில் பணித்துள்ளதால், பரிசில் வீதிகள் வெறிச்சோடியுள்ளன.
பிரான்சில் சுற்றுச்சூழல் மாசடைவை கண்காணிக்கும் Airparif நிறுவனம், தற்போது மாசடைவை அளவிட்டுள்ளது.
இதில் வரலாறு காணாத அளவு குறைந்த சூழல் மாசடைவு பதிவாகியுள்ளது. Airparif நிறுவனம் தெரிவித்ததன் படி, இல்-து-பிரான்ஸ் முழுவதும் சுற்றுச்சூழல் ‘பச்சை’ நிறத்தில் உள்ளது.
இந்த அளவு குறைந்த சுற்றுச்சூழல் மாசடைவு முன்னர் எப்போதும் இல்-து-பிரான்சுக்குள் பதிவாகியிருக்கவில்லை.
Airparif நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (CEO ) Karine Léger தெரிவிக்கும் போது குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் ‘பூச்சியம்’ எனும் அளவினை அடைய மிக தொலைவில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்தவாரம், வெப்பநிலை மிதமாக இருந்தது. ஆனால் இவ்வாரத்தில் வெப்பநிலை சாதமாக இல்லை. ஆனால் சுற்றுச்சூழல் மாசடைவு ‘பூச்சியம்’ எனும் அளவுக்கு வர இப்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor