தொடர் மழையால் 28 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் பெருமேகங்கள் திரண்டதன் காரணமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது.

இந்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது.

அங்கு சுமார் 150 வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. மேலும் 2 முஸ்லிம் பள்ளிவாசல்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.


Recommended For You

About the Author: Editor