ருஹூணு பல்கலைக்கழகத்தில் கற்கை பீடங்கள் தொடங்கப்பட்டது!!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள 3பீடங்கள் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.

விஞ்ஞான பீடம், முதுகலை சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்கள் ஆகியனவே இன்று திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதுடன், சமூக விஞ்ஞான பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக ருஹூணு பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் குறித்த பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் சிலர், அமைதியின்மையினை ஏற்படுத்தியதுடன் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

இந்நிலையில் ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor