ஐரோப்பா திரும்பியுள்ள ஹூவாவி!

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவி (Huawei) இத்தாலியில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்றாண்டுகளுக்கு அந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா அண்மையில் ஹூவாவி நிறுவனத்தை, முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அறிவித்திருந்த நிலையில் இந்த புதிய முதலீட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஹூவாவி நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைகள் தொடரும் சந்தர்ப்பத்தில், ஐரோப்பாவில் காலூன்றி அதன் செல்வாக்கை அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

புதிய திட்டத்தின் மூலம் 1,000 வேலை வாய்ப்புகள் நேரடியாக உருவாக்கப்படுகின்ற அதேவேளை, 2,000 வேலை வாய்ப்புகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று Huawei நிறுவனம் கூறியுள்ளது.


Recommended For You

About the Author: Editor