வீதியால் யாழ். கொழும்புத்துறையில் குழப்பம்!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள வீதி ஒன்றினை அடைப்பதற்கு முற்பட்டபோது அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.

கொழும்புத்துறை பிரதான வீதியில் இருந்து நெடுங்குளம் செல்வதற்காக குறித்த வீதி சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வீதியினை மூடுமாறு சில குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ள போதும் பெரும்பாலான மக்கள் இவ் வீதியினை மூடுவதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.

இதேவேளை கடந்த மாதம் 26 ம் திகதி குறித்த வீதியினை மூடுவதற்கு யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் சென்றபோது மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து அவர்கள் திரும்பி சென்றிருந்தனர்.

குறித்த வீதி தமது சொந்த காணிக்குள் இருப்பதாகவும், இதனால் இவ் வீதிக்கு கதவு போடவுள்ளதாகவும் ஒரு தரப்பு தெரிவித்த நிலையில் அதற்கு இன்னொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் அவ் இடத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு களேபரமாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor