சர்வதேச பொலிஸ் உதவியை நாடும் இலங்கை!

காலி துறைமுகத்தில் இருந்து 154 கடல் மைல் தூரத்தில் ஆழ்கடலில் பயணித்த படகில் இருந்து கடந்த வாரம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 106 கோடி ரூபா மதிப்புள்ள 70 கிலோ ஹெரோயின் போதைப் பொருளானது,

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவரால் அனுப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கும் விஷேட விசாரணைகளிலேயே இவை தெரியவந்துள்ள நிலையில், அப் படகில் இருந்து கைது செய்யப்பட்ட 9 ஈரானியர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களான குறித்த ஈரான் மற்றும் பாகிதான் பிரஜைகளை கைதுசெய்ய இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor