கிராமங்களை மூழ்கடித்து நீர்த்தேக்கம் – மூழ்கிய கிராமங்கள் வெளிவருகின்றன.

மொரஹகந்த நீா்தேக்க புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மிக நீண்டகாலம் நீாில் மூழ்கியிருந்த கிராமங்கள் வெளியே வர தொடங்கியிருக்கின்றது.

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு 34 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

இதன்காரணமாக நீரில் மூழ்கியிருந்த பல கிராமங்கள் மீண்டும் காட்சியளித்துள்ளதனை காண முடிந்துள்ளது.

நேற்று அந்த பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொறியியலாளர்களால் இவை அவதானிக்கப்பட்டுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக வேறு பிரதேசங்களுக்கு குடியேறிய மக்கள், மீண்டும் தோன்றிய தங்கள் கிராமங்களை பார்ப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.

மீண்டும் தோன்றிய தங்கள் கிராமத்தில் உடைந்த தங்கள் வீடுகளை பார்ப்பதற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது.

தங்கள் வீடுகளை மூழ்கடித்து நீர்த்தேக்கம் உருவாக்கிய போதிலும் தமக்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்